Sunday 14 March 2010

விவேக சிந்தாமணி - 04

மலர்ந்த முகத்துடன் இடுவதே மாபெரும் விருந்து.

"ஒப்புடன் முகம மலர்ந்தே
உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ்இட் டாலும்
உண்பதே அமிர்த மாகும்
முப்பழ மொடுபா லன்னம்
முகங்கடுத் திடுவா ராயின்
கப்பிய பசியி னோடு
கடும்பசி ஆகுந் தானே"


பொருள் :-

நாம் விருந்துக்குச் செல்லும் வீட்டிலுள்ளவர்கள் நம்மைக் கண்டவுடன் இணக்கமுடன் முகம் மகிழ்ச்சியால் விகசிக்கப் பெற்று, நமக்கு வேண்டிய மரியாதைகளைச் செய்து, நம்மிடத்து உண்மையையே பேசி, உப்பில்லாத கஞ்சியை வார்த்தால் கூட அதை உண்டால் நமக்கு அது அமிர்தம் போல் தெரியும். நம்மைச் சரிவர உபசரியாமல் நம்மிடம் அன்பின்றி முகத்தைச் சுளித்துக்கொண்டே மூவகை பழங்களோடு பாற்சோற்றை அளித்தபோதும் அது நமக்கு திருப்தி அளிக்காமல் ஏற்கனவே நிறைந்திருக்கும் பசியுடன் மேலும் கடும்பசியை உண்டாக்கிவிடும்.


Post a Comment

8 comments:

  1. தற்செயலாக இந்த தளத்தை பார்க்க நேரிட்டது... பதிவுகள் அனைத்தும் அருமை. தொடரட்டும் உமது தமிழ் சேவை

    ReplyDelete
  2. இந்த பாடலை எனது ”முகநூலில்” FACEBOOK தலைப்பாக இட்டுள்ளேன் :)

    ReplyDelete
  3. மிக்க நன்றி ஆளவந்தான்...

    ReplyDelete
  4. இன்று மதியம் , அலுவலகத்தில் , சாப்பிட அமர்ந்தேன் ...
    அப்போது, உங்களை போன்ற சக தோழிகள் , சாப்பிட அழைத்தார்கள்.... அவர்கள் சாப்பாட்டை என்னுடன் பகிர்ந்து கொண்டனர்..அப்போது, தங்கள் பதிவு நினைவு வந்து, இந்த பாடலை சொல்லி விளக்கினேன்... ரசித்தார்கள்...
    பதிவுக்கு நன்றி... தொடரட்டும் தங்கள் பணி....

    ReplyDelete
  5. மிக்க நன்றி பிச்சைக்காரன்...

    ReplyDelete
  6. arumaiyana pathivukal vaalthukal

    ReplyDelete
  7. ungala ella pathivukalum arumai vaalthukal

    ReplyDelete