"ஆபத்துக்கு உதவாப் பிள்ளை
அரும்பசிக்கு உதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர்
தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன்
குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம்
பயனில்லை ஏழும்தானே"
பொருள் :
மிக்க துன்பம் உண்டான காலத்தில் உதவி செய்து அத் துன்பத்தை நீக்காத மகனும், அரிய பசியை நீக்க உதவாத உணவும், நீர் வேட்கையைத் தணிக்காத தண்ணீரும், வீட்டின் வறுமை நிலைமையை உணராமல் அதிகம் செலவு செய்யும் மனைவியும், சினத்தை அடக்கிக் கொள்ளாத அரசனும், ஆசிரியரின் உபதேசத்தை மனத்தில் கொள்ளாத மாணவனும், பாவங்களை நீக்காத தீர்த்தமும், என்ற இந்த ஏழினாலும் பயனில்லையாம்.
Post a Comment
// .... "என் கடன் பணி செய்து கிடப்பதே" //
ReplyDeleteநல்ல பாலிஸி தோழி, நாங்க எல்லாம் என் கடன் கடன் வாங்கிப் பிழைப்பதேன்னு வாழ்க்கை நடத்துபவர்கள்.
சித்தர்கள் பத்தி எல்லாம் நல்லா எழுதியிருக்கீங்க, பொறுமையா அனைத்துப் பதிவுகளையும் படிக்கின்றேன். நீங்கள் இரசத்தைக் கட்டியது உண்டா? இல்லை படிப்பறிவு மட்டும்தானா?
ஆன்மீகம் பற்றிய கருத்துக்கள் கூட அருமையாக இருக்கின்றது.
கவிதைகளும் அருமை. நன்றி. நிறைய எழுதுங்கள் இனிமேல் படிக்கின்றேன்.
நீங்கள் இரசத்தைக் கட்டியது உண்டா? இல்லை படிப்பறிவு மட்டும்தானா?/// ஆமாம் உண்டு இது பற்றிய விளக்கத்தை அந்த ப்ளோக்ல விளக்கமா சொல்லுகிறேன். மிக்க நன்றி
ReplyDeleteஅருமையான பாடலும் விளக்கமும்...
ReplyDeleteமிக்க நன்றி தோழா...
ReplyDelete