Wednesday, 3 March 2010

விவேக சிந்தாமணி..

நீதிக் கருத்துக்களை பாடல்களின் மூலமாக கூறும் அதே வேளை பல்வேறு சுவை ததும்பும் பாடல்களும் கலந்து அழகு படத் தொகுக்கபாட்ட நூலே விவேக சிந்தாமணியாகும்.

இலக்கியங்கள் பலவற்றிலிருந்தும், தனிப்பாடல்களாக உலவியவற்றிலிருந்தும் சிறந்த பாடல்களாக தாம் கருதியவற்றை தேர்ந்தெடுத்து கதம்பமாக்கி தருகிறார் தொகுப்பாசிரியர்.

தொகுத்தவர் யாரென்றும், அவர் காலம் என்னவென்றும் இன்னும் திட்டவட்டமாக தெரியவில்லை.

இந்த நூல் நாயக்க மன்னர்கள் காலத்தில் உருப்பெற்றிருக்கலாம் என்பது ஒரு சாரார் கருத்து.

தொகுத்தவர், பாடல்களை எந்தவித வகுப்பு பகுப்புக்கும் உட்படுத்தாமல் எந்த வித வரைமுறையும் பயன்படுத்தாமல்
வெறும் கலவையாக தந்துள்ளார்.

அவ்வாறு தந்த பாடல்களில், ஏறத்தாள எல்லாப் பாடல்களும் சிந்தைக்கிநியவை, பொருள் புரிதற்கு எளியவை.

சில பாடல்கள் இந்தக் காலத்திற்கு ஒவ்வாதவையாகவும், ஏற்றுக்கொள்ள இயலாதவையாகவும் உள்ள போதிலும், அக்கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கும் விதத்திற்காக அப்பாடல்களை படித்துச் சுவைக்கலாம்.

ஆகவே, அடுத்த அடுத்த பதிவுகளில் அந்த பாடல்களையும் விளக்க உரைகளையும் தெளிவாக பார்க்கலாம்.


Post a Comment

3 comments:

  1. தமிழ் கூறும் நல்லுலகம்,தங்கள் பதிவைக் காத்திருக்கிறது,.

    ReplyDelete
  2. மிக்க நன்றி...

    ReplyDelete
  3. தோழி பழமையான தமிழ் நூல்களை எவ்வாறு படிப்பது மேலும் புரிந்துகொள்வது உதவினால் நன்றாக இருக்கும் ,
    இது பலரின் அவா , அதை இங்கே பதியுங்கள்

    ReplyDelete