Saturday 29 May 2010

விவேக சிந்தாமணி - 07


மூடர்களின் குணம்

"பொருட் பாலை விரும்புவார் காமப்பால்
இடைமூழ்கிப் புரள்வர் கீர்த்தி
அருட்பாலாம் அறப்பாலைக் கனவிலுமே
விரும்பார்கள் அறி வொன்று
இல்லார் குருப்பாலர் கடவுளர் பால்
வேதியர்பால் புரவலர்பால் கொடுக்கக்
கோரார் செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே
கோடி செம்பொன் சேவித்து இடுவார். "


பொருள் :-

அறிவென்று ஒன்றும் கிடையாத மூடர்கள் பொருட்செல்வத்தில் தான் ஆசை கொள்வார்கள், சிற்றின்பத் திலேயே கிடப்பார்கள் , புகழையும் அருளையும் தரக்கூடிய தருமா நெறியில் நிற்க மாட்டார்கள் , குருவிடம் , கடவுளிடம், பிராமணர்களிடம் ( முறையே தட்சனை, சமர்ப்பணம், தானம்) கொடுக்க விரும்ப மாட்டார்கள், தங்களை மதிக்காமல் தங்களுக்கு நல்லது சொல்லாமல் தங்களை செருப்பால் அடிப்பவர்களுக்கே வழிய ஏராளமான பொன்னை பொருள்கள கொடுப்பார்கள் என்பது இதன் பொருள்.



Post a Comment

5 comments:

  1. அட என்னை பத்தி அந்த காலத்துலயே ஒரு புண்ணியவான் பாட்டு எழுதி வச்சிருக்காரே :)

    ReplyDelete
  2. பொருள் விளக்கம் அருமை.. நீங்கள் ஏலெவலிலை தமிழே படிச்சனீங்கள்?

    ReplyDelete
  3. @கமல்

    நான் ஏலெவலிலை விஞ்ஞான பிரிவில் படித்தேன் நன்றி...

    ReplyDelete
  4. ஏலெவலிலை என்றால்?

    ReplyDelete
  5. //குருவிடம் , கடவுளிடம், பிராமணர்களிடம் //
    முதல் இரண்டு பேர் சரி...மூன்றாமவர் ஏன் இங்கு...எங்கோ தவறு இருக்கிறது....
    பொருள் விளக்கம் அருமை.வாழ்த்துக்கள்...

    ReplyDelete