Monday, 19 April 2010

விவேக சிந்தாமணி - 06

பொருளிருந்தால் போருந்தியிருப்பர்.

"ஆலிலை பூவும் காயும்
அளிதரும் பழமும் உண்டேல்
சாலவே பட்சி எல்லாம்
தம்குடி என்றே வாழும்
வாலிபர் வந்து தேடி
வந்திப்பர் கோடா கோடி
ஆலிலை ஆதிபோனால்
அங்குவந்திருப்பர் உண்டோ?"


பொருள் :-

ஆலமரத்தில் இலை காய் கனி ஆகியவை இருந்தால் மிகுதியான பறவைகள் அம்மரத்தில் குடியிருக்கும் , அதே ஆலமரம் பட்டுப் போய் விட்டால் அம்மரத்தில் எந்தப் பறவையும் வந்து தங்காது, அது போல பெரும் செல்வம் பெற்றிருப்போரை தேடி ஏராளமானோர் வருவர், அதே செல்வந்தர்கள் வறுமைப் பட்டால் அவர்களைத் தேடி வருபவர் யாரும் உண்டோ?


Post a Comment

4 comments:

  1. அருமையான பாடல், இது ஒரு வாழ்வியல் நியதி, இருக்கும் இடத்தையே எல்லாம் நாடும், இல்லாத இடத்தில் தேவைகள் இல்லை, வாழ்க்கை தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் சுமந்தே நகர்கின்றது. நன்றி

    ReplyDelete
  2. மிக்க நன்றி... பாலன்.

    ReplyDelete
  3. தோழி!ஒவ்வொரு பாடலிலும் நல்ல கருத்துகளும், சொல்லாடலும்!
    நன்றிகள்!

    ReplyDelete
  4. மிக்க நன்றி...அண்ணாமலை..!!

    ReplyDelete