Friday, 2 April 2010

விவேக சிந்தாமணி - 05.

"கதிர்பெறு செந்நெல்வாடக்
கார்க்குலம் கண்டு சென்று
கொதிநிரைக் கடலில் பெய்யும்
கொள்கைபோல் குவலயத்தே
மதிதனம் படைத்த பேர்கள்
வாடினோர் முகத்தைப் பாரார்
நிதிமிகப் படைத்தோர்க் கீவார்
நிலை இலார்க்கு ஈயமாட்டார்."



பொருள் :-

கதிர்களை யுடைய செந்நெற் பயிர்கள் நீரில்லாமல் வடிக் கொண்டிருக்க மேகக் கூட்டமானது அதைக் கண்ட போதும் அந்த இடத்தில் மழையைப் பெய்யாமல் ஆர்ப்பரிக்கும் அலைகளைக் கொண்ட கடலிலே பெய்தாற் போல, உலகத்தார்கள் மதிக்கும் அளவு அதிக செல்வம் பெற்ற செல்வந்தர்கள், வறுமையால் வாடுபர்களுக்கு உதவிடாமல், செல்வம் உள்ளவருக்கே கொடுக்கிறார்களாம்.

குறிப்புரை :-


மதிதனம் - வினைத்தொகை.


Post a Comment

5 comments:

  1. ஆகா.! அரு...மையான பாடல் தோழி!
    அருமையான கருத்து!
    நன்றிகள்!

    ReplyDelete
  2. மிக்க நன்றி... அண்ணாமலை..!!

    ReplyDelete
  3. அண்ணன் ஞானவெட்டியான் எழுதியதியதையே தாங்களும் எழுதுகிறீர்களே! ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  4. ஆமாம் உண்மை தான் அவர் உரை எழுதிய பாடல்களுக்கு என்னக்கு தெரிந்த வரையில் உரை எழுதுகிறேன் இதை நான் அவர் கிட்டயே சொல்லிட்டு தானே எழுதறேன்.. நன்றி

    ReplyDelete
  5. இந்த பதிவுக்கு மதிப்பெண்.
    ௱/௱.....சந்தோஷமா?

    ReplyDelete