Saturday 14 May 2011

நிறைவும்! மறைவும்!



நகைக் கடையின் கண்ணாடிப் பெட்டியில் வெல்வெட் துணியில் பொதியப் பட்டு கண்ணை கவர்ந்து கொண்டிருந்த இரத்தினக் கல்லைப் பார்த்துக் தெருவில் கிடந்த கூழாங்கல் ஒன்று பொறாமைப்பட்டது.

அந்த ரத்தினத்தைப் போல நானும் ஒரு கல்தானே, எனக்கு ஏன் மதிப்பில்லை?. இப்படி தெருவில் கிடக்கிறேனே என ஓலமிட்டது. இதைக் கேட்டு பக்கத்தில் கிடந்த கடப்பாரை சிரித்துக் கொண்டே சொன்னது...!

ஏ கூழாங்கல்லே! இத்தனை காலமாய் உன்னை நீயே பெரிதாக எண்ணிக் கொண்டு பலரும் மிதித்துப் போகும்படி இந்த தெருவில் கிடக்கிறாய் ஆனால் இரத்தினக் கல் அப்படியில்லை, நிறைந்து வளர்ந்து பூரித்து இரத்தினமாகும் வரை அது வெளியில் தலை காட்டியதே இல்லை. எங்கோ மண்ணின் மறைவில் அது தன்னை தானே உருவாக்கிக் கொண்டிருந்தது என்றது.

அப்படியென்றால் ...? என்று இழுத்த கூழாங்கல்லைப் பார்த்து கடப்பாரை அழுத்தம் திருத்தமாய் சொன்னது..

“நிறைவாகும் வரை மறைவாக இரு!, மறைவாக இருக்கும் நிறைவுக்குதான் எப்போதும் மரியாதை”




Post a Comment

5 comments:

  1. நல்ல கருத்து.

    ReplyDelete
  2. எவ்வளவு உயரிய விஷயத்தை எவ்வளவு
    எளிதாகச் சொல்லிப் போகிறீர்கள்!
    மிகச் சிறந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வாழ்த்துகள் தோழி உங்கள் பதிவு அருமை

    ReplyDelete
  4. நல்ல அறிவுரை வாழ்த்துகள் தோழி
    http://kowsy2010.blogspot.com/

    ReplyDelete