Friday 29 April 2011

பயனில்லை...


எலும்பும் தோலுமாய்க் கிழட்டுப் பசு ஒன்று ஒதுக்குபுறமாய்க் கவனிப்பாரற்றுப் படுத்திருந்ததை வெள்ளாடு ஒன்று கவலையுடன் பார்த்தது.

பின் அது பசுவைப் பார்த்து "முன்பெல்லாம் உன்னை வீட்டுக்காரன் நாள் தவறாமல் குளிப்பாட்டுவானே, புல்லும் வைக்கோலும் போட்டுத் தடவிக் கொடுப்பானே, இப்போதெல்லாம் திரிம்பிக் கூடப் பார்ப்பதில்லயே ஏன்?" என்று சோகமாய்க் கேட்டது..

"பயனில்லை அதனால் பார்ப்பதில்லை" என்று சொல்லிய பசு..

பெருமூச்சுடன் சொன்னது..

"மடியில் பாலும் இல்லை
மதிக்க ஆளும் இல்லை"




Post a Comment

7 comments:

  1. சொல்லவேண்டியதை
    சுற்றி வளைக்காமல்
    நச் சென சொல்லியிருக்கிறீர்கள்
    பாராட்டுக்கள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமை . இது இப்போதைய நமது முதியோர் இல்லத்து தெய்வங்களை எனக்கு நினைவுறுத்துகிறது
    மடியில் பால் இல்லை மதிக்க ஆள் இல்லை . இதுபோல் சிந்தனைகள் தொடர வாழ்த்துக்கள்

    S.Thilak Mahendraraja

    ReplyDelete
  3. பழுத்த மரத்தையே பறவைகள் தேடிவரும். மடியில் கனம் இருந்தாலேயே மதிப்பவர்கள் பலர் இருப்பர்

    ReplyDelete
  4. உண்மைதான்...............
    ஏணிப்படிகள் கூட இப்படித்தான் ஏங்கித்தவிக்கின்றன.

    ReplyDelete