Thursday 17 June 2010

விவேக சிந்தாமணி - 09.

குரங்குப் புத்தியும் கோணல் புத்தியும்


"வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறிசொலத் தாண்டி பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே"


பொருள் :-

மழையில் நனைந்து கொண்டிருந்த குரங்கு ஒன்றைப் பார்த்து கவலைப் பட்ட தூக்கனாங்குருவி, அதனிடம் நீயும் என்னைப் போல ஒரு கூடு கட்டிக் கொண்டிருந்தால் இப்படி மழையில் நனைய வேண்டி வராதே என்றது. ஆத்திரம் கொண்ட குரங்கு தூக்கனாங் குருவியின் கூட்டினை பிய்த்து எறிந்தது. அதைப் போல அரிய நூல்களின் உயரிய கருத்துக்களை அறிவில்லாத மூடர்களிடம் பகிர்ந்து கொள்வதால் எவ்வித பயனும் இல்லை, துன்பமே விளையும் என்பது இதன் பொருள்.



Post a Comment

1 comment:

  1. அன்புத்தோழி,
    தங்களின் இனிய தமிழ்ப்பணி தொடர
    மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    விவேக சிந்தாமணி எக்காலத்திலும்
    பொருந்தக்கூடிய அரிய அறிவுரைகளின் தொகுப்பு.
    மீண்டும் வாழ்த்துக்கள்.

    கபிலன்

    ReplyDelete