Friday 19 February 2010

தமிழுக்கு...

தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!


Post a Comment

5 comments:

  1. எனதன்புத் தோழி
    என் வலைப் 'பூ'வில்
    ஒரு
    தேன் இதழாய்
    இணைந்தமைக்கு
    நன்றி

    ReplyDelete
  2. மிக்க நன்றி தோழா

    ReplyDelete
  3. அருமையான பாடல்..!!!! மீண்டும் படிக்க ஓர் வாய்ப்புக் கொடுத்தமைக்கு நன்றி..!!
    இதற்கு மாற்றுக்கருத்தே இல்லை..!!
    இப்போதுள்ளவர்கள் அமுதைத் தான் வேண்டாம்..!!
    என நஞ்சை நாடுகிறார்களே..!! என்ன செய்வது..!!
    நம்மவர்களால் தமிழ் மீண்டும் ஒளிரட்டும்..!!

    ReplyDelete
  4. மிக்க நன்றி தோழா

    ReplyDelete