Thursday 22 July 2010

சிலேடை, நையாண்டிப் பாடல்கள்...

சிலேடை என்பது ஒரு அலங்காரம். ஒரு பொருள் தரும் சொல் வேறு ஒரு பொருளையும் மறைமுகமாய்க் குறிக்குமானால் அது சிலேடை ஆகும்.

ஏசல் என்பது நேரடியாக சொல்லி இடித்து உரைப்பதே ஆகும். ஜாடை என்பது மறைமுகமாக சொல்வதாகும். பொதுவாக ஜாடை பேசுவதில் எப்போதும் பெண்கள் கைதேர்ந்தவர்களாவர். இப்படி ஜாடையாக கேலி செய்யும் போது கேலிக்குரியவர்கள் தங்களைப் பற்றித்தான் பேசப்படுகிறது என்று புரிந்து கொள்வர். ஆனால் தம்மைத்தான் அவ்வாறு குறிப்பிடுகிறார்கள் என்று யாராலும் நிறுவ முடியாதது இதன் சிறப்பம்சம்.

சிலேடை நயத்துடன் எழுதப்படும் கவிகள் அந்தக்காலத்தில் மிகவும் ரசிக்கப்பட்டதுடன், புகழ் பெற்றும் விளங்கியது.

சிலேடையாகவும், நையாண்டியாகவும் பாடுவதில் சிறந்து விளங்கியவர் கவி காளமேகப் புலவர்.

காளம் என்றால் கரிய என்று பொருள், காளமேகம் என்பது கறுத்த மழை மேகத்தைக் குறிக்கும். காளமேகத்தில் சற்று குளிர்ந்த காற்று பட்டால் போதும் மழை கொட்டு கொட்டென்று கொட்டிவிடும்.

அதேபோல, கவி காளமேகமும் கவிமழை பொழிவதில் வல்லவர் என்று போற்றப்படுகிறார்.

இனி வரும் பதிவுகளில் இந்த சிலேடை பாடல்கள் பற்றிப் பார்க்கலாம்...



Post a Comment

2 comments:

  1. கவிகாளமேகப்புலவர் - வெண்பாக்களின் தேசம்!
    சிலேடையும், நையாண்டியும் அவரது பாட்டில்
    புரண்டு விளையாடும்!அவர் பாடல்கள் கேட்க ஆவல்!
    நன்றிகள்!

    ReplyDelete
  2. நான் தங்கள் ரசனை ,தமிழ் நடை,ஆழ்ந்த அறிவு,இவையெல்லாம் ஒரே பிறவியில் வருபவையல்ல.எனவே பல பிறவிகளில் வந்த அறிவை அரிவையாக வந்து தெரிவிக்கிறீர்கள்.நான் நீங்கள் வெளியிடாத பாடல்களாகவும்,சாதாரணமாக யாருக்கும் எளிதில் தெரியாத பாடல்களாகவும் தெரிந்தெடுத்து வெளியிட மிக கடினமாக உள்ளது.அவ்வளவு பாடல்கள் நீங்கள் வெளியிட்டுவிட்டீர்கள்.வளர்க உங்கள் திறம்.
    நன்றி
    என்றென்றும் நட்புடன்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete