Monday, 20 December 2010

பிச்சாடண மூர்த்தி..

தில்லைச் சிதம்பரத்தில் ஆண்டுதோறும் பிச்சாடண மூர்த்தியாகச் சிவபெருமான் ஊர்வலமாய் வரும் உற்சவம் நடக்கும். அதாவது,

நடராஜரை ஆடிய பாதமாக அல்லாமல் பிச்சை எடுக்கும் வேடத்தில் உற்சவ மூர்த்தியாய் எடுத்துவருவார்கள். அப்போது,

யானை எல்லா அலங்காரங்களுடனும் முன்னே செல்லும், அபோது எக்காளம் எனப்படும் வாத்தியக் கருவி இசைப்பார்கள். தாளங்கள் முழங்கும். பெரிய ராஜ மரியாதையுடன் பிச்சாடண மூர்த்தி எழுந்தருளுவார்.

இந்தக் கோலத்தைப் பார்த்த காளமேகம், இகழ்வது போலப் போற்றிப் பாடுகிறார்.

"நச்சரவம் பூண்டதில்லை நாதரே தேவரீர்
பிச்சைஎடுத் துண்ணப் புறப்பட்டும் - உச்சிதமாம்

காளம்ஏன்? குஞ்சரம்ஏன்? கார்கடல்போல் தான்முழங்கும்
மேளம் ஏன்? ராஜாங்கம் ஏன்?."


நச்சுப் பாம்பை அணிந்த தில்லை நாதரே! நீர் பிச்சை எடுத்துச் சாப்பிடப் புறப்பட்டு விட்டீர். இந்த லட்சணத்தில் உமக்கு சிறப்பான(உச்சிதமாம்) எக்காளம் எதற்க்கு? யானை எதற்க்கு? கரிய நிறமுள்ள கடலைப் போல முழங்கும் மேளம் எதற்க்கு? இத்தனை ராஜ மரியாதை எதற்கு என்று கேட்கிறார் காளமேகம்.



Post a Comment

4 comments:

  1. அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நல்ல பதிவு. காளமேகப் புலவரின் பாடல்களைப் பற்றி தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு தங்கள் பதிவு மிகவும் உதவியாக இருக்கும். நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete