சிவபெருமானுக்கு நெற்றிக் கண்ணையும் சேர்த்து மூன்று கண்கள் என்பார்கள். இதனால் முக்கண்ணன் என்றா காரண பெயரும் அவர்க்கு உண்டு.
ஆனால், காளமேகப் புலவரோ, ஒரு கணக்கிட்டு கழித்துக் கழித்துக் கடைசியில் சிவபெருமானுக்கு அரைக் கண் மட்டுமே சொந்தம் என்கிறார்.
எப்படி?
சிவனுக்கு மூன்று கண்கள் தான். ஆனால், அவர் உடலில் சரி பாதியாக இருப்பவர் உமை தானே. அப்படியானால் சிவனின் மூன்று கண்களில் உமைக்கு ஒன்றரைக் கண் சொந்தமாகிறது ஆக மிச்சமாக இருப்பது ஒன்றரைக் கண்.
அந்த ஒன்றரைக் கண்ணிலும், ஒரு கண் வேடன் கன்னப்பனால் கொடுக்கப் பட்டது. அதனால் அந்தக் கண்ணும் சிவனுக்கு சொந்தமானது அல்ல இரவல் வாங்கிய கண். எனவே ஒன்றரையில் இருந்து ஒன்று போனால் அரைக் கண்ணே மிகுதி ஆகிறது. ஆக சிவனுக்கு அரைக் கண் தான் என்று பாடுகிறார் காளமேகம்..

முக்கண்ணன் என்றரனைமுன்னோர் மொழிந்திடுவர்
அக்கண்ணற் குள்ள தரைக் கண்ணே - மிக்க
உமையாள்கண் ணொன்றரைமற் றூன்வேடன் கண்ணொன்று
அமையுமித னாலென் றறி!
Post a Comment
ஹா..
ReplyDeleteகாளமேகப் புலவரைப் பற்றி நிறைய அறிய முடிந்தது. அருமையான தகவல்கள். நன்றி
ReplyDeleteஅருமை
ReplyDeleteபுகழ்வதற்கு எனக்கு தகுதியில்லை என்றாலும் பாராட்ட மனது உண்டு,,,,மனமார வாழ்துகிறேன்
ReplyDeleteஅருமை அருமை அருமை
ReplyDeleteகாளமேகப் புலவர் அருமையாக சொல்லியுள்ளார்.. சிவனுக்கு அரைக்கண் என்பதற்கான விளக்கத்தை பாடலில்.... பகிர்ந்தமைக்கு நன்றி தோழி
ReplyDeleteகாளமேகம் என்றும் அழியா கால மேகம்
ReplyDelete