ஒரு சமயம் ஒருவர் காளமேகத்திடம் எல்லோருக்கும் ஆறுதலை அளிக்கக் கூடியதாக ஒரு பாடலை பாடும் படி கேட்டார்.
"எல்லோருக்கும் ஆறுதலை அளிக்க முடியாது. வெண்பாவில் நான்கு அடிகள் தான் உண்டு, அதற்க்குள் அடங்குபவர்கள் எல்லோருக்கும் ஆறுதலை உண்டு" என்று சொல்லி விட்டு, பாடினார்...
சங்கரர்க்கும் ஆறுதலை சண்முகற்கும் ஆறுதலை
ஐங்கரர்க்கும் மாறுதலை யானதே - சங்கைப்
பிடித்தோர்க்கும் மாறுதலை பித்தாநின் பாதம்
படித்தோர்க்கும் ஆறுதலை பார்!
காளமேகம் பாடி முடித்ததும் பாடலை விரும்பிக் கேட்டவர், "என்ன இது, எல்லா மக்களுக்கும் ஆறுதலைத் தரக்கூடிய பாடலைப் பாடும் படி கேட்டால், நீங்கள் எல்லோருக்கும் ஆறுதலை இருப்பதாகப் பாடிவிட்டீர்களே" என்று கேட்டார்.
அதற்க்கு காளமேகம் விளக்கினார்,
சங்கரராகிய சிவபெருமானுக்கும் ஆறு தலையில் உள்ளது (சங்கரர்க்கும் ஆறுதலை),சரவணபவனாகிய முருகன் ஆறு உருவங்கள் ஆகப் பிறந்து பின்பு ஓன்று சேர்ந்ததால் அவருக்கும் ஆறுதலைகள் (சண்முகற்கும் ஆறுதலை), ஐங்கரனாகிய விநாயகருக்கு மனிதத் தலை இல்லாமல் மாறுபட்ட யானையின் தலை இருப்பதால் மாறுதலை(ஐங்கரர்க்கும் மாறுதலை யானதே), பித்தன் என்று அழைக்கப்படும் சிவபெருமானின் பாதக் கமலங்களை பூஜித்துக் கொண்டு இருப்பவர்கள் எல்லோருக்கும் நிச்சயம் ஆறுதல் உண்டு(பித்தாநின் பாதம்
படித்தோர்க்கும் ஆறுதலை பார்) என்றார்.
இந்தப் பாடலைக் கேட்டோருக்கும், மற்றோருக்கும் ஆறுதலை தரும் என்பதில் ஐயம் இல்லை அல்லவா?

Post a Comment
காளமேகப்புலவரின் அருமையான பாடல்!
ReplyDeleteஅருமையான விளக்கங்களுடன்!
இன்றும் செந்தமிழ் காத்துக் கொண்டிருக்கிறது. இதுபோல் சிலர் செவ்வாய் புகுந்து விளையாட.
தமிழில் 'ற்' பக்கத்தில் மெய்யெழுத்து வராது என நினைக்கிறேன் தோழி.
ReplyDeleteஉங்கள் பதிவுகளுக்கு மிக்க நன்றி.
தமிழ் மனம் முதல்கட்ட தேர்வில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...
ReplyDelete