Tuesday, 14 September 2010

தேங்காயும் நாயும் ஒன்று..

இந்திய நாட்டில் எந்தப் பாகத்திற்குச் சென்றாலும் இந்துக்களிடையே ஒரு வழக்கம் இருப்பதைப் பார்க்கலாம். எந்தச் சடங்கு நடைபெற்றாலும் நிச்சயமாய்த் தேங்காய் இருக்கும்.

மூன்று கண்களை உடையது தேங்காய். சிவனுக்குப் பெயரே முக்கண்ணர். தேங்காய்க்குமத் ஓடு துணை, சிவனுக்கும் ஓடு துணை.

ஆனால் காளமேகம் தேங்காயை நாய்க்கு ஒப்பிட்டுப் பாடியிருக்கிறார் எப்படி?

"ஓடும் இருக்குமதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாடும் குலைதனக்கு நாணாது - சேடியே
தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயும் நேர்செப்பு".

நாய் எப்போதும் அலைந்துகொண்டே திரியும். நாய்க்கு வேலையும் இல்லை. இருக்க நேரமும் இல்லை என்பது பழமொழி. நாய் ஓடும். இருக்கும். தேங்காய்க்கு ஓடும் இருக்கும் நாய் வாயின் உட்புறம் வெளிறிப்போய் இருக்கும். தேங்காயை உடைத்தால் அதன் குழிந்த உட்புறம் வெளுத்திருக்கும். கண்மாயின் நீர்ப்பிடிப்புப் பகுதியை உள்வாய் என்பார்கள். தேங்காயின் நீர்ப்பிடிப்புப் பகுதி தேங்காயின் உள்வாய். நாய் தனக்கு விருப்பமுள்ள குலைத்தலைச் (குரைத்தல் என்பது வழக்கில் குலைத்தல் ஆனது) செய்வதற்கு வெட்கப்படாது. அதுபோல் பலரும் காணத் தேங்காய் தன் குலையில் இருக்க வெட்கப்படாது. இவ்விதம் இரண்டுக்கும் உள்ள ஒப்புவமையை வெளியிடுகிறார் காளமேகம்.



Post a Comment

3 comments:

  1. பகிர்விற்கு நன்றி தோழி, காளமேகம் என்றாலே சிலேடை வெண்பாக்களும், நகைச்சுவைப் பாடல்களும் சிறப்பு

    ReplyDelete
  2. kaalamekam.., ithe varisaiyil
    adutha padal
    NITHAMPAMUM NAAYUM.
    ...
    why they missused their tallent in this way..
    God bless them.
    ....
    I love ur posts...
    pls write. more.
    ...
    thx
    Soorya

    ReplyDelete
  3. உங்கள் தளத்தை நமது திரட்டியில் இணைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்
    மகளிர்கடல்

    ReplyDelete